Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

மளமளவென எரிந்த தீ…. சேதமடைந்த பொருட்கள்…. திருப்பத்தூரில் பரபரப்பு….!!

கடையில் திடீரென தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள வடபுதுப்பட்டி அருகாமையில் பர்னிச்சர் கடை இயங்கி வருகின்றது. இந்த கடையை கில்முருங்கை கிராமத்தை வசிக்கும் தரணீஸ்வரன் என்பவர் நடத்தி வருகின்றார். இந்நிலையில் தரணீஸ்வரன் வழக்கம்போல் இரவு நேரத்தில் கடையில் இருந்த டேபிள் சேர், கட்டில் உள்ளிட்ட பொருட்களை அடுக்கி வைத்துவிட்டு கடையை மூடி விட்டு சென்றுள்ளார்.

அப்போது திடீரென கடையில் இருந்து புகை வெளியேறியதால் இது பற்றி தரணீஸ்வரனுக்கு அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்துள்ளனர். பின்னர் அவர் அங்கு வந்து பார்த்த போது உள்ளே இருந்த பொருட்கள் தீப்பிடித்து எரிந்தது தெரியவந்துள்ளது. இதனை அடுத்து தீயை அனைவரும் போராடி அணைத்தனர்.

இதனைத்தொடர்ந்து இந்த தீ விபத்தில் 2 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமடைந்துள்ளது. இது பற்றி தரணீஸ்வரன் காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். மேலும் இது குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |