சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்திற்காக தொழிலாளியை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்துள்ளனர்.
அரியலூர் மாவட்டத்தில் உள்ள சிலம்பூர் கிராமத்தில் சின்னத்தம்பி என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் சின்னதம்பி அதே பகுதியில் வசிக்கும் 15 வயது சிறுமியிடம் தன்னை காதலிக்குமாறு வற்புறுத்தியுள்ளார். இதனை அடுத்து சிறுமியை மிரட்டி சின்னதம்பி பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் கூறப்படுகிறது.
இது குறித்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் போஸ்கோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சின்னதம்பியை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.