மதுபோதையில் கிணற்றுக்குள் தவறி விழுந்து கொத்தனார் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள இரண்டெல்லைபாறை பகுதியில் பாண்டி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கொத்தனார் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான பாண்டி மது குடித்துவிட்டு அப்பகுதியில் இருக்கும் கிணற்றின் சுற்று சுவரில் அமர்ந்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக மதுபோதையில் பாண்டி கிணற்றுக்குள் விழுந்து தண்ணீரில் மூழ்கி இறந்துவிட்டார்.
இதுகுறித்து தகவல் அறிந்து தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பாண்டியன் சடலத்தை மீட்டனர். அதன்பிறகு காவல்துறையினர் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.