உக்ரைனில் சிக்கியுள்ள இந்திய மாணவர்களை அழைத்து வருவதாக கூறி பெற்றோரிடம் பணம் மோசடி செய்த நபரை போலீஸ் கைது செய்துள்ளனர்.
உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையே ஏற்பட்டுள்ள போர் நெருக்கடியால் பல்வேறு நாட்டு மக்களும் தங்கள் சொந்த நாடுகளுக்கு திரும்பியுள்ள நிலையில், இந்திய அரசும் இதற்காக பல ஏற்பாடுகளை செய்து வந்துள்ளது. இந்நிலையில் இந்திய குடிமக்களை ருமேனியா, போலந்து நாடுகளின் வழியாக அழைத்து வருவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதற்காக 2 ஏர் இந்தியா விமானங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இது ஒரு புறம் இருக்க பணம் பறிக்கும் மோசடி கும்பல் ஒன்று உலாவி வருகிறது.
உக்ரைனில் சிக்கியுள்ள இந்திய மாணவர்களை அழைத்து வருவதாக அவர்களின் பெற்றோரிடம் பணமோசடி செய்து ஏமாற்றியுள்ளது. அதாவது இணையதளம் மூலமாக பண மோசடியில் ஈடுபட்ட அந்த நபர் மத்திய பிரதேச போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். அந்த மோசடி நபர் ரூ.37,000-த்தை மத்திய பிரதேசத்தை சேர்ந்த வைசாலி என்ற பெண்ணிடம் அபகரித்து உள்ளார்.
இந்தப் பெண் உக்ரைனில் சிக்கியுள்ள தனது மகளை மீட்பதற்காக மத்திய,மாநில அரசுகளை தொடர்பு கொண்ட விஷயத்தை அறிந்த மோசடி கும்பல், தன்னை பிரதமர் அலுவலகத்தில் வேலை பார்க்கும் பி.ஏ. வாக அறிமுகப்படுத்தியுள்ளார். இதனை அடுத்து விமான டிக்கெட் எடுப்பதற்காக ரூ.42,000 பணத்தை கேட்டுள்ளார். இந்த பணத்தை உடனே அந்தப் பெண் கொடுத்து எந்த பதிலும் வராததால்,பின் போலீசில் புகார் அளித்துள்ளார். அதன் பின்னர் போலீசார் விசாரணையில் அந்த குற்றவாளி கைது செய்யப்பட்டான்.