உக்ரைனில் இருந்து திரும்பும் மருத்துவ மாணவர்களுக்கு இணையவழியில் கல்வி கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
மாணவர்கள் இணைய வழியில் மருத்துவம் பயில உதவி தேவைப்படின் அரசு ஏற்படுத்தி தரும் எனக் கூறிய அவர், நாளை (பிப்.27) தேனாம்பேட்டையில் போலியோ சொட்டு மருந்து முகாமை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார் என்று தகவல் தெரிவித்துள்ளார்.