Categories
பல்சுவை

கரடியின் ஆதிக்கம் தொடரும்: வல்லுனர்கள் முன்னறிவிப்பு!

அமெரிக்கா- ஈரான் இடையே நிலவி வரும் போர் பதற்றத்தால் இந்திய பங்குச்சந்தையில் 1, 944 பங்குகள் கடும் சரிவை சந்தித்துள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்கா – ஈரான் இடையே நிலவி வரும் போர் பதற்றத்தால் இந்திய பங்குச்சந்தை கடும் சரிவை சந்தித்துள்ளது.வர்த்தகத்தின் முதல் நாளான நேற்று பங்குசந்தை தொடங்கிய போதே, சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவை சந்தித்தது.

இந்த சரிவு நீண்ட நாட்களுக்கு தொடர வாய்ப்புள்ளதாக பங்குச்சந்தை நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். கடந்த இரண்டு நாட்களாக பங்குசந்தையில் அனைத்து பங்குகளும் சரிவை சந்திக்கும் நிலையில் மும்பை பங்குசந்தையின் மொத்த மதிப்பு கணிசமாக குறைந்துள்ளது.

இதனால் முதலீட்டாளர்களுக்கு மூன்று லட்சம் கோடி ரூபாய் இழப்பு நேர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இன்றைய பங்குசந்தையில் முதலீடு செய்ய வாடிக்கையாளர்கள் தயக்கம் காட்டுவார்கள் என்றும் அதனால் பங்குச்சந்தை மேலும் சரிய வாய்ப்புள்ளது எனவும் பங்குத்தரகர்கள் தெரிவிக்கின்றனர்.

Categories

Tech |