Categories
கிரிக்கெட் விளையாட்டு

IND VS SL: 2 ஆவது போட்டி…. குறுக்கிடுமா மழை…? பிட்ச் ரிப்போர்ட்டின் முழு விபரம் இதோ….!!

இந்தியா, இலங்கை அணிக்கு எதிரான டி20 போட்டிகளின் 2 ஆவது தொடர் நேற்று தர்மசாலா மைதானத்தில் வைத்து நடைபெறும் போது நிச்சயமாக மழை பெய்வதற்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இந்தியா, இலங்கை அணிகளுக்கிடையே 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் பிப்ரவரி 24 ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இதில் லக்னோவில் நடைபெற்ற முதல் போட்டியில் இந்தியா 62 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது. இதனையடுத்து 2 ஆவது போட்டி தர்மசாலாவில் நேற்று நடைபெற்றுள்ளது. ஆனால் வானிலை மையம் நேற்று காலை 9 மணி முதல் 2 மணி வரை மழை பெய்வதற்கு 50 முதல் 70 சதவீதம் வரை அதிகளவு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. இதனால் போட்டி நடைபெறுவதில் சிக்கல் ஏற்படும் அபாயம் இருந்துள்ளது. ஆனால் இன்று வானிலை தெளிவாக இருக்கும் என தர்மசாலா வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இவ்வாறு இருக்க 2 ஆவது போட்டி நடைபெறும் தர்மசாலா மைதானம் குறித்த பிட்ச் ரிப்போர்ட்டின் முழு விவரத்தை தற்போது பார்ப்போம். கடந்த 2016ம் ஆண்டு தர்மசாலா மைதானத்தில் டி20 உலக கோப்பை போட்டிகள் நடைபெற்றுள்ளது. இதில் மொத்தமாக நடைபெறவிருந்த 7 போட்டிகளில் 2 மழை காரணமாக கைவிடப்பட்டுள்ளது. அதேபோல் கடந்த 2019 ஆம் ஆண்டில் இந்தியா தென்ஆப்பிரிக்காவுக்கிடையே நடந்த போட்டியும் மழை காரணமாக கைவிடப்பட்டுள்ளது. ஆனால் கடந்த 2015 ஆம் ஆண்டு இந்தியா தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 போட்டி இங்கு முழுமையாக நடைபெற்றுள்ளது. அதில் ரோகித் சர்மா சதம் அடித்துள்ளார். இருப்பினும் தென் ஆப்பிரிக்கா அந்த தொடரை கைப்பற்றி வெற்றிவாகை சூடியுள்ளது.

Categories

Tech |