Categories
தேசிய செய்திகள்

வட்டியை உயர்த்திய பிரபல வங்கி…. வாடிக்கையாளர்கள் செம ஹேப்பி…!!!

பேங்க் ஆஃப் பரோடா வங்கியானது வாடிக்கையாளர்களின் சேமிப்பு மற்றும் வைப்பு நிதி கணக்குகளுக்கான வட்டியை உயர்த்தி உள்ளது.

பொதுத்துறை வங்கியான பேங்க் ஆஃப் பரோடா சேமிப்பு கணக்கு மற்றும் வைப்பு நிதி திட்டங்களுக்கான வட்டி விகிதத்தை அதிகரித்து உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. பிப்ரவரி 25 முதல் புதிய வட்டி விகிதம் அமலுக்கு வந்துள்ளது. அதன்படி 2 கோடி ரூபாய்க்கு உட்பட்ட தொகைக்கு இந்த வட்டி வீதங்கள் பொருந்தும். மேலும் அதிகபட்ச 3.30 % வட்டி சேமிப்பு கணக்குகளுக்கு இனிமேல் வழங்கப்படும் என்றும், அதிகபட்சம் 5.25 % வட்டி வைப்புநிதி கணக்குகளுக்கு வழங்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளது.

அதன்படி சேமிப்பு கணக்குகளுக்கான வட்டி கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

*1 லட்சம் ரூபாய் வரை – 2.75%

*1 லட்சத்துக்கு மேல், 200 கோடி ரூபாய்க்குள் – 2.85%

*200 கோடிக்கு மேல், 500 கோடி ரூபாய்க்குள் – 3.05%

*500 கோடிக்கு மேல், 1000 கோடி ரூபாய்க்குள் – 3.25%

*1000 கோடி ரூபாய்க்கு மேல் – 3.30%

மேலும் வைப்பு நிதிகளுக்கான வட்டி கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

*7 – 14 நட்கள் : 2.8%

*15 – 45 நாட்கள் : 2.8%

*46 – 90 நாட்கள் : 3.7%

*91 – 180 நாட்கள் : 3.7%

*181 – 270 நாட்கள் : 4.3%

*271 – 364 நாட்கள் : 4.4%

*1 ஆண்டு – 5%

*366 – 400 நாட்கள் : 5.1%

*401 நாட்கள் – 2 ஆண்டு : 5.1%

*2 – 3 ஆண்டு : 5.1%

*3 – 5 ஆண்டு : 5.25%

*5 – 10 ஆண்டு : 5.25%

Categories

Tech |