Categories
மாநில செய்திகள்

HAPPY NEWS: தமிழக குடும்ப அட்டைதாரர்களுக்கு…. அரசு போட்ட அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் ரேஷன் கடைகளின் வாயிலாக குடும்ப அட்டைதாரர்கள் அரிசி, சர்க்கரை, மண்ணெண்ணெய், கோதுமை, பருப்பு, சமையல் எண்ணெய் மற்றும் பலசரக்கு பொருள் என்று மலிவான விலையில் பொருட்களை பெற்று வருகின்றனர். இந்நிலையில் ரேஷன் கடைகளில் கைவிரல் ரேகை சரிபார்ப்பின்றி பொருட்களை வழங்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

அதாவது ரேஷன் கடைகளில் ஆதார் இணைய தரவு தளம் இயங்கவில்லை, விரல்ரேகை சரியாக பதியவில்லை என குடும்ப அட்டைதாரர்கள் திருப்பி அனுப்பப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளது. இதையடுத்து கைரேகை பதிவு செய்ய இயலாவிட்டால் இதர வழிமுறைகளில் உரிய பதிவுகளை மேற்கொண்டு பொருள்கள் விநியோகம் செய்யப்பட வேண்டும் என்று அரசு தெரிவித்துள்ளது.

Categories

Tech |