வளர்ப்பு மகளை கர்ப்பமாக்கிய தந்தையை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள திருச்செந்தூர் பகுதியில் முத்துக்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவர் வளர்ப்பு மகளாக 15 வயது சிறுமியை வளர்த்து வருகிறார். இந்நிலையில் முத்துக்குமார் தனது வளர்ப்பு மகளான 15 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு சிறுமிக்கு உடல் நிலையில் மாற்றம் ஏற்பட்டு வாந்தி எடுத்துள்ளார்.
இதனால் சிறுமியை தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று மருத்துவ பரிசோதனை செய்துள்ளனர். அப்போது சிறுமி 3 மாத கர்ப்பிணியாக இருப்பது தெரியவந்துள்ளது. இது குறித்து சிறுமி திருச்செந்தூர் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் முத்துக்குமார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.