Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

“என்னை தேட வேண்டாம்” வாலிபருக்கு நேர்ந்த விபரீதம்…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்….!!

கடலில் மூழ்கி வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பாலாஜி நகர் பகுதியில் செல்வராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராஜ்குமார் என்ற மகன் இருந்துள்ளார். இவர் காந்திநகரில் உள்ள தியேட்டர் கேண்டீனில் வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 24-ஆம் தேதி வேலைக்கு சென்ற ராஜ்குமார் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனையடுத்து ராஜ்குமார் தனது செல்போன் மூலம் தாயாரிடம் திருச்செந்தூரில் இருப்பதாகவும், தன்னை தேட வேண்டாம் என்றும் கூறியுள்ளார்.

இந்நிலையில் ராஜ்குமார் கடலில் குளித்துக் கொண்டிருந்த போது திடீரென தண்ணீரில் மூழ்கி மூச்சுத்திணறி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த திருச்செந்தூர் கடலோர பாதுகாப்பு குழும காவல்துறையினர் விரைந்து சென்று ராஜ்குமாரின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |