சென்னை டூ மங்களூரு, ராக்போர்ட் எக்ஸ்பிரஸ் ரயில்கள் நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளன.
சென்னை எழும்பூரில் இருந்து கர்நாடகா மாநிலம் மங்களூருக்கு தினசரி இரவு 11:35-க்கு எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில் மார்ச் 2ஆம் தேதியில் இருந்து இரவு 11:15க்கு புறப்பட்டு, மறுநாள் இரவு 7:15 மணிக்கு மங்களூரு சென்ட்ரல் நிலையம் சென்றடையும். எழும்பூரில் இருந்து திருச்சிக்கு தினசரி இரவு 11:15-க்கு ராக்போர்ட் எக்ஸ்பிரஸ் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில் மார்ச் 2ஆம் தேதியில் இருந்து இரவு 11:35-க்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை, 4:55 மணிக்கு திருச்சி சென்றடையும்.