Categories
தேசிய செய்திகள்

மக்களே….! நாளை முதல் தங்க பத்திரம் வாங்கலாம்…. உடனே முந்துங்கள்…!!!

Sovereign gold bond scheme என்ற முதலீட்டுத் திட்டத்தின் கீழ் தங்க பத்திரங்கள் ஒவ்வொரு வருடமும்  வெளியிடப்படுகின்றன. இந்த திட்டத்தில் தங்கத்துக்கான விலையை முன்கூட்டியே நிர்ணயம் செய்யப்படுகின்றது. இதில் கூடுதலாக செய்கூலி, சேதாரம் என்று எதுவுமே கிடையாது. எனவே இந்த தங்க பத்திரத்தில் நம்பிக்கையுடன் முதலீடு செய்யலாம். தங்கத்தில் முதலீடு செய்தால் ஆண்டுக்கு 2.5 சதவீதம் வட்டி கிடைக்கும். நாம் முதலீடு செய்திருக்கும் தங்கத்திற்கு வட்டி மூலமாக அதிக வருமானத்தை ஈட்டிக் கொள்ள முடியும்.

தங்கத்தின் விலை ஒவ்வொரு நாளும் அதிகரித்துக்கொண்டே  இருப்பதனால் விலை உயர உயர வட்டி மூலமாக அதிக லாபம் முதலீட்டாளர்களுக்கு கிடைக்கும். தங்கப்பத்திரம் வாங்கி எட்டு வருடங்கள் வைத்திருக்கலாம். எட்டு வருடம் முடிந்த பிறகு வருமானத்திற்கு வரி செலுத்த தேவை கிடையாது.

மத்திய அரசின் 10 ம் கட்ட தங்க பத்திர வெளியீடு நாளை தொடங்கி மார்ச் 4 ஆம் தேதி வரை 5 நாட்கள் நடைபெறும். இந்த தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு ரூ5,109 ஆக விலை  நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக   ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. வலைத்தளம் அல்லது மின்னணு முறையில் மேற்கொள்ள முதலீடுகளுக்கு ஒரு கிராமுக்கு 50 ரூபாய் தள்ளுபடி வழங்கப்படும். வங்கிகளில், ஹோல்டிங் கார்ப்பரேஷன் ,மும்பை& தேசிய பங்குச் சந்தைகள் தலைமை அஞ்சலகத்தில் தங்க பத்திரங்கள் கிடைக்கும்.

Categories

Tech |