பூண்டி வெள்ளியங்கிரி மலையில் ஏறி செல்வதற்கு பணம் வசூலிக்கப்படுவதால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர்
கோவை மாவட்டம், பேரூர் அருகே பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவில் உள்ளது. இந்த கோவில் அடிவாரத்தில் இருந்து செங் குத்தாக உள்ள 6 மலைகளை கடந்து 7-வது மலையில் சுயம்புலிங்கமாக வெள்ளியங்கிரி ஆண்டவர் இருக்கிறார்.
தென்கயிலாயம் என அழைக்கப்படும் இந்த கோவிலுக்கு ஆண்டுதோறும் மகா சிவராத்திரி, சித்ரா பவுர்ணமி, சித்திரை 1 ஆகிய நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் மலை ஏறி சாமி தரிசனம் செய்வார்கள்.ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி மாதம் முதல் மே மாதம் வரை 4 மாதங்கள் மட்டுமே பக்தர்கள் வெள்ளியங்கிரி மலையேற அனுமதி உண்டு.
கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக பக்தர்கள் மலையேற தடை விதிக்கப்பட்டது.நாளை (திங்கட்கிழமை) மகாசிவராத்திரி என்பதால் ஏராளமான பக் தர்கள் வெள்ளியங்கிரி மலையேற வருவார்கள். இதனால் அங்கு முன்னேற்பாடு பணிகள் நடைபெற்று வருகின்றது. மேற்கு மண்டல ஐ.ஜி. சுதாகர் பாதுகாப்பு பணிகளை நேரில் சென்று ஆய்வு நடத்தினார்.
இந்நிலையில் வெள்ளியங்கிரி மலை ஏறி செல்ல பக்தர்களுக்கு இன்னும் முறையாக அனுமதி அளிக்க வில்லையென்றாலும் மலையேற பக் தர்கள் வருகிறார்கள். மலை ஏறும் பக்தர்களிடம் ரூ.100 கட்ட ணம் வனத்துறை சார்பில் வசூலிக்கப்படுகிறது. வசூலிக்கும் பணத்திற்கு ரசீது கொடுப்பதில்லை.இதனால் பக்தர்கள் பெரும் அதிர்ச்சில் உள்ளனர்.