உக்ரேனில் சிக்கியிருந்த 240 இந்தியர்களுடன் மூன்றாவது விமானம் புதாபெஸ்ட்டில் இருந்து டெல்லிக்கு புறப்பட்டது.
நோட்டா அமைப்பில் உக்ரைன் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த நாடு மீது போர் தொடுத்துள்ளது ரஷ்யா. இது உக்ரைனுக்கு நேரடி பாதிப்பு என்றால் பிற நாடுகளுக்கும் அது மறைமுகமாக பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவை பொருத்தவரை உக்ரேனில் சிக்கியிருக்கும் மாணவர்களை மீட்பது உடனடி சவாலாக மாறி இருக்கிறது. கடந்த 24 ஆம் தேதி மாணவர்கள் உட்பட 16 ஆயிரம் இந்தியர்கள் உக்ரைனில் சிக்கியிருப்பதாக மத்திய அரசுக்கு தகவல் வந்தது.
கடந்த 24ம் தேதி போர் தொடங்கியதுமே , உக்ரைன் வான்பகுதி பயணிகள் விமானப் போக்குவரத்துகள் மூடப்பட்டது. இதனால் அங்கு இருக்கும் ஆயிரக்கணக்கான மாணவர்களை மீட்பதில் பெரும் முட்டுக்கட்டை ஏற்பட்டுள்ளது. அதேநேரம் அங்கு வசிக்கும் இந்தியர்களை அந்நாட்டு எல்லைகளுக்கு வர செய்து அங்கிருந்து விமானம் மூலம் கொண்டு வர முடிவு எடுக்கப்பட்டது. அதன்படி ருமேனியா மற்றும் ஹங்கேரி அழைத்து வரப்பட்டு பின்னர் அங்கிருந்து விமானம் மூலம் இந்தியா அழைத்து வரப்படுகின்றனர். இவ்வாறு சென்ற விமானங்களில் இருந்து முதல் விமானம் இருந்து 219 உக்ரேன் வாழ் இந்தியர்களை ஏற்றுக்கொண்டு இந்தியா வந்தடைந்தது.
இதற்கிடையில் உக்ரைனில் சிக்கியிருந்த மேலும் 250 இந்தியர்களுடன் இந்தியா விமானம் இன்று அதிகாலை 3 மணிக்கு வந்து சேர்ந்தது. இவர்களை விமான போக்குவரத்து துறை மந்திரி ஆகியோர் வரவேற்றனர். இந்நிலையில் போரால் பாதிக்கப்பட்டுள்ள 240 இந்தியர்கள் நாட்டில் இருந்து ஹங்கேரி நாட்டின் புதாபெஸ்டுவில் இருந்து மூன்றாவது விமானம் டெல்லி வந்தடைய உள்ளனர் .