Categories
உலக செய்திகள்

உக்ரைன், ரஷ்யாவில் ரத்து செய்யப்பட்ட விளம்பரங்கள்…. டுவிட்டர் நிறுவனம் அதிரடி அறிவிப்பு….!!!

டுவிட்டர் நிறுவனமானது உக்ரைன் மற்றும் ரஷ்யாவில் இந்த தளத்தில் வெளியிடப்படும்  விளம்பரங்களை தற்காலிகமாக ரத்து செய்யப்படுவதாக அறிவித்துள்ளது.

கடந்த வியாழக்கிழமை அன்று உக்ரைன் மீது ஆக்ரோஷமான போரைத் தொடங்கிய ரஷ்யா, தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருகிறது. இதனால் உலகம் முழுவதும் கடும் அதிர்வலைகளை இந்தப் போரானது ஏற்படுத்தி வருகிறது. இதனையடுத்து உக்ரைன்-ரஷ்யா போர் தொடர்பான வீடியோக்கள், புகைப்படங்கள் மற்றும் கள நிலவரங்கள் சமூக வலைதளமான பேஸ்புக், டுவிட்டர் போன்றவற்றில் பகிரப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் உக்ரைன் மற்றும் ரஷ்யாவில் டுவிட்டர் தளத்தில் வெளியிடப்படும்   விளம்பரங்களை, பொது பாதுகாப்பு தகவலுக்கு முன்னுரிமை அளிக்கும் விதமாகவும் தற்காலிகமாக ரத்து செய்யப்படுவதாக டுவிட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து பேஸ்புக் நிறுவனமும், ரஷ்யாவை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் செய்தி நிறுவனங்கள் போர் தொடர்பான தவறான வதந்திகளை பரப்பி வருகிறது. இதனை தடுக்கும் விதமாக அந்த நிறுவனங்கள் பேஸ்புக் பயன்படுத்துவதற்கான பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

Categories

Tech |