குரூப் 2, 2ஏ தேர்வுக்கு இலவச இணையதள பயிற்சி வகுப்புகள் திருவாரூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடத்தப்படுகிறது .
திருவாரூர் மாவட்ட கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பு என்னவென்றால்,
மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டு மையத்தில் செயல்படுத்த படும் தன்னார்வ பயிலும் வட்டம் மூலம் பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி வகுப்புகளும் மாணவர்கள் தேர்வுக்கு தயாராகும் வகையில், கிராமப்புற மாணவர்களும் போட்டி தேர்வை எளிதாக எதிர்கொள்ளும் வகையில், ஆன்லைனில் உரிய இணையதள பயிற்சி வகுப்புகளும் நடத்தப்பட உள்ளன.
காணொலி வழி கற்றல், மின்னணு பாடக்குறிப்புகள், போட்டி தேர்வுக்கான பயிற்சிகள், மாதிரி தேர்வு வினாத்தாள் உள்ளிட்டவை http://tamilnadu careerservices. tn.gov.in. என்ற இணையதளத்தில்இடம் பெற்றுள்ளது. இந்த இணையதளத்தில் தேர்வர்கள் தங்கள் பெயர், பாலினம், தந்தை மற்றும் தாய் பெயர், முகவரி, ஆதார் எண் மற்றும் வேலை வாய்ப்பக பதிவு எண்ணை கொடுத்து உள்ளே சென்று போட்டி தேர்வு என்ன என்பதை தேர்வு செய்து பயன் பெறலாம்.
பயனீட்டாளர் பெயர் மற்றும் கடவுச்சொல்லை பயன்படுத்தி தேர்வுக்கு உள்ள பாடக்குறிப்புகளை தமிழ், ஆங்கிலத்தில் இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மாதிரி தேர்வுக்கான பகுதியும் கொடுக்கப்பட்டுள்ளது