Categories
உலக செய்திகள்

உக்ரேன் விவகாரம்: “பொருள் மற்றும் உயிரிழப்புகள்” கவலையளிக்கிறது…. ஜெலன்ஸ்கியிடம் கூறிய மோடி….!!

போரால் ஏற்பட்ட உயிரிழப்புகளும், பொருளிழப்புகளும் கவலையளிப்பதாக உக்ரேன் அதிபரிடம் தொலைபேசியில் மூலம் இந்திய பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.

உக்ரேன் மீது ரஷ்யா வான், தரை, கடல் என மும்முனைகளிலிருந்தும் தாக்குதலை நடத்தி வருகிறது. இதற்கு உலக நாடுகள் அனைத்தும் ரஷ்யாவிற்கு தங்களது கண்டனத்தை தெரிவித்துள்ளார்கள். இருப்பினும் ரஷ்யா உக்ரேன் மீது ஏவுகணை மழையை பொழிந்து வருகிறது. அதுமட்டுமின்றி தலைநகர் கீவையும் ரஷ்ய படை வீரர்கள் சுற்றி வளைத்துள்ளார்கள்.

இந்நிலையில் இந்திய பிரதமர் மோடியிடம் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அப்போது இந்திய பிரதமர் உக்ரைன் அதிபரிடம் அங்கு சிக்கியுள்ள இந்தியர்களை மீட்பதற்கு தங்களது அரசு உதவ வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும் போரால் ஏற்பட்ட உயிரிழப்புகள் மற்றும் பொருள் இழப்புகள் மிகுந்த கவலையளிப்பதாகவும் இந்திய பிரதமர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |