நடிகர் விஜய் பெங்களூரில் உள்ள புனித் ராஜ்குமார் நினைவிடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்திய போட்டோ மற்றும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.
கன்னட சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் புனித் ராஜ்குமார் சென்ற ஆண்டு அக்டோபர் 29ஆம் தேதி மாரடைப்பால் காலமானார். அவரின் உயிரிழப்பு ரசிகர்கள் நண்பர்கள் உறவினர்கள் திரையுலகினர் என அனைவரையும் அதிர்ச்சியடைய செய்தது. தமிழ் நடிகரான சூர்யா, விஷால் உள்ளிட்டோர் புனித் ராஜ்குமாரின் மறைவிற்கு பெங்களூரில் உள்ள அவரின் நினைவிடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்தினார்கள். இந்நிலையில் நடிகர் விஜய் பெங்களூரில் உள்ள புனித் ராஜ்குமாரின் நினைவிடத்தில் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களும் வீடியோக்களும் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
புனித் ராஜ்குமார் நடித்துக்கொண்டிருந்த திரைப்படங்கள் பாதியில் நின்ற நிலையில் தற்போது அதனை வெளியிடுவதற்கான முயற்சிகளை செய்து வருகின்றனர். முதலாவதாக ஜேம்ஸ் திரைப்படத்தை வெளியிடுவதற்கான வேலைகள் நடந்து கொண்டு இருக்கின்றது. இத்திரைப்படத்தில் புனித் ராஜ்குமார் படப்பிடிப்பை முடித்துள்ளார். ஆனால் டப்பிங் பேச வில்லை. அதற்காக புனித் ராஜ்குமாரின் அண்ணன் சிவராஜ்குமார் டப்பிங் பேசுகிறார். இத்திரைப்படமானது மார்ச் 17-ஆம் தேதி ரிலீஸாக உள்ளது குறிப்பிடத்தக்கது.