மோட்டார் சைக்கிள்கள் எதிரெதிரே மோதிக்கொண்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள கட்ராம்பட்டி கிராமத்தில் வசித்து வருபவர் ஜெயராமன் (வயது 50). இவர் அந்த கிராமத்தில் கொத்தனார் வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் நேற்று அவர் வேலைக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டு இருந்தர். அப்போது அந்த ஊரில் வசித்து வரும் ஆதி என்பவரும் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டு இருந்துள்ளார்.
இந்நிலையில் கட்ராம்பட்டி அருகே வந்து கொண்டு இருந்த இரு மோட்டார் சைக்கிள்களும் எதிர் எதிரே மோதிய போது ஜெயராமன் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ஆதி என்பவர் உயிருக்கு போராடி கொண்டிருந்த நிலையில் ரோட்டில் இருந்தவர்கள் அவரை மீட்டு அங்குள்ள அரசு மருத்துவமனையில் சேர்ந்தனர். மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து திருமங்கலம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.