Categories
மாநில செய்திகள்

பெற்றோர்களே உடனே கிளம்புங்க…. இன்னும் கொஞ்சம் நேரம் தான் இருக்கு…. மிஸ் பண்ணிடாதீங்க…..!!!!!

தமிழ்நாட்டில் இன்று (பிப்..27) போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெற்று வருகிறது. சொட்டு மருந்து வழங்கும் மையங்கள் காலை 7.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை செயல்படும். சென்னையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்கள் போலியோ சொட்டு மருந்து முகாமை தொடங்கி வைத்தார். கொரோனா தடுப்பூசி திட்டத்தின்படி தமிழகத்தில் கர்ப்பிணித் தாய்மார்கள் மற்றும் குழந்தைகளுக்கு 11 வகையான தடுப்பூசிகளை பயன்படுத்தி தடுக்கப்படக்கூடிய 12 வகை நோய்களுக்கு எதிராக பாதுகாப்பு வழங்கப்படுகிறது.

தமிழகத்தில் 2004-ஆம் ஆண்டு முதல் மற்றும் இந்தியாவில் 2014-ஆம் ஆண்டு முதல் போலியோ இல்லாத சூழல் இருக்கிறது. இது தொடரும் வகையில் இந்த வருடம் 27-வது முகாம் இன்று மாநிலம் முழுவதும் நடைபெறுகிறது. தமிழகத்திலுள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிகள் மற்றும் முக்கியமான இடங்கள் என்று மொத்தம் 43,051 மையங்களில் இந்த முகாம் நடைபெறும்.
இவ்வாறு நடைபெறும் முகாம்களில் 5 வயது வரையுள்ள மொத்தம் 57.61 லட்சம் குழந்தைகளுக்கு (6 வயதிற்கு உட்பட்ட கூடுதலான குழந்தைகள் உள்பட) போலியோ சொட்டு மருந்து வழங்க திட்டமிடப்பட்டு இருக்கிறது. கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடித்து பயணிக்கும் குழந்தைகளின் வசதிக்காக முக்கிய பேருந்து நிலையங்கள், ரெயில் நிலையங்கள், சோதனைச் சாவடிகள், விமான நிலையங்களில் பயணவழி மையங்களிலும் சொட்டு மருந்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அதுமட்டுமல்லாமல் நடமாடும் குழுக்கள் வாயிலாக நெடுந்தூரம் மற்றும் எளிதில் போக முடியாத பகுதிகளில் வசிக்கும் குழந்தைகளுக்கும் சொட்டு மருந்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு  குழந்தைகளுக்கு சொட்டுமருந்து வழங்கும் பணியில் 2 லட்சத்திற்கும் அதிகமான சுகாதார மற்றும் அங்கன்வாடிப் பணியாளர்கள், ஆசிரியர்கள், தன்னார்வலர்கள் ஆகியோர் ஈடுபட்டுள்ளனர். இந்நிகழ்ச்சியில் அமைச்சர் மா.சுப்பிரமணியன், வேலு எம்.எல்.ஏ., முதன்மைச் செயலாளர் டாக்டர் ஜெ.ராதா கிருஷ்ணன், சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப்சிங் பேடி, செந்தில்குமார், டாக்டர் எஸ். உமா, டி.எஸ்.செல்வ விநாயகம் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் பங்கேற்றனர்.

Categories

Tech |