Categories
கிரிக்கெட் விளையாட்டு

டி20 போட்டிகளில் அதிக வெற்றி …. ! கேப்டன் ரோகித் சர்மா மகத்தான சாதனை…. விவரம் இதோ ….!!!

சொந்த மண்ணில் 17 டி20 போட்டிகளில் இந்திய அணியின் கேப்டனாக வழிநடத்தியுள்ள ரோகித் சர்மா 16 வெற்றிகளை பெற்று தந்து சாதனை படைத்துள்ளார்.

இலங்கை அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் லக்னோவில் நடைபெற்ற தொடக்க ஆட்டத்தில் இந்திய அணி  62 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.இதனிடையே நேற்று நடந்த 2-வது டி20 போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.

இந்த வெற்றியின் மூலம் சொந்த மண்ணில் அதிக டி20 போட்டிகளில் வெற்றிகளை பெற்று தந்த கேப்டன் என்ற சாதனையை ரோகித் சர்மா பெற்றுள்ளார்.இதுவரை சொந்த மண்ணில் நடந்த 17  டி20 போட்டிகளில் இந்திய அணியை வழி நடத்தியுள்ள அவர் 16 வெற்றிகளை பெற்று தந்துள்ளார். இதற்கு முன்பாக இங்கிலாந்து அணியின் கேப்டன் மோர்கன் மற்றும் நியூசிலாந்து அணியின் கேப்டன் வில்லியம்சன் ஆகியோர் 15 வெற்றிகளை பெற்றதே சாதனையாக இருந்தது.

Categories

Tech |