உக்ரைன்-ரஷ்யா இடையே பல ஆண்டுகளாக மோதல் இருந்து வருகிறது. இதன் காரணமாக, தனது நாட்டின் பாதுகாப்பை பலப்படுத்தி கொள்வதற்கு நேட்டோ நாடுகள் அமைப்பில் இணைய உக்ரைன் விருப்பம் தெரிவித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் ரஷ்யா, உக்ரைன் எல்லையில் 1.50 லட்சம் ராணுவ வீரர்களை குவித்தது. இதற்கு அமெரிக்கா மற்றும் பல ஐரோப்பிய நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து வந்தன.
இந்நிலையில், உலக நாடுகள் எதிர்பார்த்தது போலவே உக்ரைன் மீது போர் தொடுக்க ரஷ்ய ராணுவத்துக்கு அதிபர் புடின் கடந்த 24-ஆம் தேதி அன்று அதிகாலை அதிரடியாக உத்தரவிட்டார். தற்போது உக்ரைன் மீது ரஷ்யா பயங்கர போர் புரிந்து வருகிறது. இந்நிலையில் சர்வதேச ஜூடோ சம்மேளன கவுரவத் தலைவர், தூதர் பதவியிலிருந்து ரஷ்ய அதிபர் புடினை நீக்கியுள்ளதாக சம்மேளனம் அறிவித்துள்ளது.