Categories
உலக செய்திகள்

புதின் இலக்குகளை அடையும் வரை தொடரும் போர்….ரஷிய பாதுகாப்பு கவுன்சில் துணைத் தலைவரின் ஆவேச பேச்சு…!!!

ரஷ்யப் படைகளின் தாக்குதலானது அந்நாட்டு அதிபரின் இலக்குகள் எட்டும் வரை தொடரும் என அந்நாட்டு பாதுகாப்பு கவுன்சில் துணைத் தலைவர் தெரிவித்துள்ளார்.

ரஷ்ய படைகள், உக்ரைன் மீது அதிகமான தாக்குதலை ஏற்படுத்தி வரும் நிலையில் போரை நிறுத்துவதற்கு உலக நாடுகள் தொடர்ந்து, ரஷ்யாவுக்கு அழுத்தம் கொடுத்து வருகின்றன. மேலும் ரஷ்யா மீது அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் கடுமையான பொருளாதார தடைகளை விதித்து வருகின்றன. அதிலும் அந்த நாட்டின் அதிபர் புதின் மீதும் தனிப்பட்ட முறையில் சில தடைகள் விதிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் இதுகுறித்து ரஷ்ய தேசிய பாதுகாப்பு கவுன்சில் துணைத் தலைவரும் மற்றும் நாட்டின் முன்னாள் பிரதமருமான டிமிட்ரி மெட்வெடேவ் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது, இந்த அற்புதமான பொருளாதார தடைகள் நிச்சயமாக எதையும் மாற்ற போவதில்லை என்பது அமெரிக்காவுக்கு தெளிவாக தெரியும். மேலும் எங்கள் நாட்டின் அதிபர் புதின் நிர்ணயித்த இலக்குகள் எட்டப்படும் வரை இந்த போர்க்கால நடவடிக்கை தொடரும் என கூறியுள்ளார்.

Categories

Tech |