ரஷ்ய அரசு, உக்ரைன் நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய நகரமாக இருக்கும் கார்க்கிவை கைப்பற்றி விட்டதாக அறிவித்திருக்கிறது.
ரஷ்யா, உக்ரேன் நாட்டின் மீது தொடர்ந்து 4-ஆம் நாளாக தாக்குதல் நடத்தி வருகிறது. தலைநகர் கீவ்வில், தாக்குதல் நடைபெற்று வருவதால் அங்கு ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கிறது. நள்ளிரவு நேரங்களில் அங்கு பல்வேறு இடங்களில் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தலைநகரை கைப்பற்ற ரஷ்ய படையினர் தீவிரமாக இறங்கியுள்ளனர். இந்நிலையில், ரஷ்யா தென்கிழக்கு பகுதியில் அமைந்திருக்கும் மிகப்பெரிய நகர்களை சுற்றி வளைத்திருப்பதாக தெரிவித்திருக்கிறது. மேலும், உக்ரைன் நாட்டின் இரண்டாவது பெரிய நகராக விளங்கும் கார்கிவையும் ரஷ்யா கைப்பற்றி விட்டதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
உக்ரைன் அதிபர் அலுவலகம் இதுபற்றி தெரிவித்ததாவது, தங்கள் நாட்டின் இரண்டாவது பெரிய நகரமாக இருக்கும் கார்கிவில் ரஷ்ய படைகள் எரிவாயு குழாயை வெடிக்க செய்தனர். இதன் காரணமாக கடும் புகைமூட்டம் ஏற்பட்டிருக்கிறது. இது சுற்றுச்சூழலுக்கு பெரும் அழிவை உண்டாக்கும். மக்கள் அவரவர் வீடுகளில் பாதுகாப்பாக இருக்க வேண்டும். ஈரத்துணியால் ஜன்னல்களை அடைத்து கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.