Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

உரிய ஆவணங்கள் வேண்டும்…. வியாபாரிகளுக்கு விடுத்த எச்சரிக்கை…. போலீஸ் அதிரடி…!!

உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்லப்படும் நெல் மூட்டைகள் பறிமுதல் செய்யப்படும் என குடிமைப்பொருள் குற்றபுலனாய்வு அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

டெல்டா பகுதியில் வெளிமாவட்ட விவசாயிகள் நெல்லை குறைந்த விலைக்கு வாங்கி விற்பனை செய்வதாக அதிகாரிகளுக்கு தகவல் வந்துள்ளது. இந்த தகவலின் அடிப்படையில் குடிமைப்பொருள் குற்றபுலனாய்வு காவல்துறை அதிகாரிகள் தஞ்சாவூரில் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்த  சோதனையின் போது உரிய ஆவணம் இன்றி எடுத்து வரப்பட்ட  நெல் மூட்டைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். இதனால் வியாபாரிகள் நீதிமன்றத்தில் புகார் அளித்துள்ளனர். எனவே அரசு உத்தரவின்பேரில்  அதிகாரிகள் லாரியில் ஏற்றிக் கொண்டு செல்லப்படும் நெல்லுக்கு ஒரு படிவத்தை கொடுத்துள்ளனர். இந்த படிவத்தில் அரிசி ஆலை உரிமையாளர்கள் பெயர்கள், நெல்லை விற்பனை செய்த விவசாயிகள் மற்றும் வியாபாரிகளின் பெயர்கள் மற்றும் இடம் போன்றவைகள்  இடம்பெற்றிருக்கும்.

இந்த படிவத்தை நெல்லை ஏற்றி வரும் லாரி உரிமையாளர்கள் கட்டாயம் வைத்திருக்க வேண்டும். இந்த படிவம் இல்லாத லாரிகள் மற்றும் நெல் மூட்டைகள் பறிமுதல் செய்யப்படும் என போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் கூறியுள்ளார். இந்நிலையில் மேலவஸ்தாசாவடி, அற்புதபுரம், புதுக்குடி போன்ற பகுதிகளில் குடிமைப்பொருள் குற்றப்புலனாய்வு காவல்துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது டிரான்சீட் எனப்படும் படிவம்  நெல் மூட்டைகளை ஏற்றிவந்த லாரி ஓட்டுனர்களிடம் இருக்கிறதா என்பதை அதிகாரிகள் சோதனை செய்தபிறகு லாரிகளை அனுப்பியுள்ளனர். கடந்த சில தினங்களுக்கு முன்பாக இந்தப்படிவம் இல்லாத 2 லாரிகளையும் அதிலிருந்த  3 டன் நெல்லையும் அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

Categories

Tech |