ரஷ்யா- உக்ரைன் ஆகிய இரு நாடுகளுக்கும் இடையில் எல்லைப் பிரச்னையானது நீண்ட காலமாகமே இருந்து வருகிறது. கடந்த 2014 ஆம் ஆண்டில் உக்ரைனுக்கு சொந்தமான கிரிமியா தீபகற்பத்தை ரஷ்யா ஆக்கிரமித்தது. இதையடுத்து உக்ரைன் எல்லை பகுதியில் ரஷ்யா ராணுவ படைகளை குவித்து வந்ததால் எப்போது வேண்டுமானாலும் போர் வெடிக்கும் சூழல் நிலவி வந்த நிலையில், உக்ரைன் மீது போர் தொடுக்க ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் உத்தரவிட்டார்.
தற்போது உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் 3வது நாளாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில் உக்ரைனில் இருந்து விசா இல்லாமல் இந்திய மாணவர்கள் எல்லை கடந்து வரலாம் என்று போலந்து அரசு அறிவித்துள்ளது. உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல் தீவிரமடைந்த நிலையில் தஞ்சம் அடைவோருக்கு உதவ நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.