ஆளுநர் உரையின் மீது பேசிய காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர் பிரின்ஸ், குடியுரிமை திருத்தச் சட்டத்தை சுட்டிக்காட்டி அதற்கு எதிர்ப்பு தெரிவித்து கோலம் போட்டவர்களை காவல்துறையினர் கைது செய்தது ஏன்? என்று கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த முதலமைச்சர் பழனிசாமி:
கோலம் போடுபவர்கள் அவரவர் வீட்டு வாசலில் போட்டால் பிரச்னை இல்லை. அடுத்தவர் வீட்டில் கோலம் போட்டு அந்த வீட்டு உரிமையாளர் புகாரளித்ததால் நடவடிக்கை எடுக்கப்பட்டு கைது செய்யப்பட்டது என்று தெரிவித்தார்.
சட்டப்பேரவை உறுப்பினர் பிரின்ஸ்: நெல்லை கண்ணன் கைது செய்யப்பட்டது தொடர்பாக பேரவையில் வினா எழுப்பினார்.
முதலமைச்சர் பழனிசாமி:
பேச்சாளர் நெல்லை கண்ணன் பொதுக்கூட்டத்தில் பிரதமர், உள்துறை அமைச்சர் குறித்து பேசியது யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாது. எந்தக் கட்சி பிரமுகராக இருந்தாலும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். நெல்லை கண்ணன் கைது செய்யப்பட்டத்தில் அரசுக்கு எந்த உள்நோக்கமும் இல்லை என்று விளக்கமளித்தார்.