சாதி மதத்தின் பெயரில் சண்டையிடுவதை நிறுத்த வேண்டும் என உயிரிழந்த ராணுவ வீரர் ஒருவர் தம் கடைசி ஆடியோவில் கூறியுள்ளது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகாவை சேர்ந்த ராணுவ வீரர் அல்தாப் அகமது. இவர் கடந்த 23ஆம் தேதி அன்று காஷ்மீரில் உள்ள பனிச்சரிவில் சிக்கி உயிரிழந்துள்ளார். இவர் தனது நண்பர்களுக்கு கடைசியாக அனுப்பிய ஆடியோவில் இவ்வாறு கூறியுள்ளார்.
அதாவது, ராணுவத்தினரான நாங்கள் எங்கள் உயிரைக் கொடுத்து வேலை செய்துவருகிறோம் என்றும் சாதி, மதத்தின் பெயரில் சண்டையிடுவதை நிறுத்துங்கள். ஹிஜாப் பிரச்சனை எல்லாம் கேட்கும்போது மிகவும் வேதனை அளிக்கிறது. மேலும் தேசத்தைப் பற்றியும் சிந்தியுங்கள் என கூறியுள்ளார்.