Categories
உலக செய்திகள்

கார்கிவ் பகுதியை ஆக்கிரமித்த ரஷ்யா… மீண்டும் மீட்ட உக்ரைன்…!!!

ரஷ்ய இராணுவத்தால் கைப்பற்றப்பட்ட கார்கிவ் பகுதி, மீண்டும் உக்ரைனால் மீட்கப்பட்டிருக்கிறது.

உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா தொடர்ந்து நான்காவது நாளாக தீவிரமாக தாக்குதல் மேற்கொண்டு வருகிறது. இதில் உக்ரைன் நாட்டின் பல முக்கிய நகரங்கள் கடும் பாதிப்படைந்திருக்கிறது. எனவே, மக்கள் பதுங்கு குழிகள் மற்றும் மெட்ரோ ரயில் நிலைய சுரங்கப் பாதைகளில் தஞ்சமடைந்துள்ளனர்.

மேலும், பல மக்கள் தங்கள் உயிரை காப்பாற்றிக் கொள்ள, நாட்டிலிருந்து வெளியேற முயன்று வருகிறார்கள். தலைநகர் கீவ்வில் தாக்குதல் நடந்து வருவதால் அங்கு ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கிறது. உக்ரைன் நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய நகரான கார்க்கிவ்வை ரஸ்யா கைப்பற்றி விட்டதாக கூறப்பட்ட நிலையில் உக்ரைன் படைகள் அதனை மீண்டும் மீட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உக்ரைன் ராணுவம் கார்கிவ்வை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்திருப்பதாக அறிவித்திருக்கிறது.

Categories

Tech |