Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

கூடுதல் கட்டணம் கேட்கின்றனர்…. வியாபாரிகளின் போராட்டம்…. திண்டுக்கல்லில் பரபரப்பு…!!

வியாபாரிகள் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள நிலக்கோட்டை பேரூராட்சிக்கு சொந்தமான வாரச்சந்தை அணைப்பட்டி ரோட்டில் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. இங்கு ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை அன்று வாரச்சந்தை நடைபெறும். இந்நிலையில் பேரூராட்சியில் இருந்து ஏலம் எடுத்தவர்கள் வியாபாரம் செய்யும் வியாபாரிகளிடமிருந்து மூட்டைக்கு 10 ரூபாய் வசூல் செய்து கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டிருந்தது. ஆனால் ஏலம் எடுத்தவர்கள் கூடுதல் கட்டணம் கேட்கின்றனர். இதனால் வியாபாரிகளுக்கும், ஏலம் எடுத்தவர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதில் கோபமடைந்த வியாபாரிகள் நிலக்கோட்டை பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு திடீரென போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட வியாபாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். அதன்பிறகு வியாபாரிகள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Categories

Tech |