Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

பணத்தை எடுத்து சென்றாயா? தொழிலாளி எடுத்த விபரீத முடிவு…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வடக்கு மோளப்பாடியூர் கிராமத்தில் கூலித் தொழிலாளியான முருகன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு புவனேஸ்வரி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் முருகன் அதே பகுதியில் வசிக்கும் ராஜ் குமார் என்பவரது வீட்டிற்கு வேலைக்கு சென்றுள்ளார். இதனை அடுத்து வேலை முடிந்து மாலை நேரத்தில் முருகன் வீட்டிற்கு சென்றுவிட்டார். அப்போது ராஜ்குமார் முருகனின் வீட்டிற்கு சென்று எனது வீட்டில் இருந்த பணத்தை எடுத்து சென்றாயா? என கேட்டுள்ளார். அதற்கு முருகன் மறுப்பு தெரிவித்துள்ளார்.

ஆனாலும் ராஜ்குமார் முருகனின் மோட்டார் சைக்கிளை எடுத்து சென்றதாக கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சலில் இருந்த முருகன் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து முருகனின் மனைவி அளித்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |