மான்களை வேட்டையாடிவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அடிஅண்ணாமலை காப்புக் காட்டில் மான்கள் உள்ளிட்ட வனவிலங்குகள் உள்ளன. இந்நிலையில் சிலர் மான்களை வேட்டையாடுவதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வனத்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அடிஅண்ணாமலை காப்புக்காடு பகுதியில் துப்பாக்கியால் 2 மான்களை சுட்டு வேட்டையாடிய 3 பேரை வனத்துறையினர் சுற்றி வளைத்தனர். அதில் 2 பேர் துப்பாக்கியுடன் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். அதில் ஒருவர் மட்டும் சிக்கினார்.
அவரை பிடித்து விசாரித்ததில் அவர் திருவண்ணாமலை பகுதியில் வசிக்கும் படையப்பா என்பதும், மேலும் தப்பி ஓடியவர்கள் அதே பகுதியில் வசிக்கும் பிரகாஷ், சீனு என்பதும் வனத்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இதனைதொடர்ந்து வனத்துறையினர் படையப்பாவை கைது செய்துள்ளனர். மேலும் அந்த பகுதிக்கு மான் கறி வாங்க வந்த திருவண்ணாமலை பல்லவன்நகர் பகுதியில் வசிக்கும் தீபராஜ் என்பவரையும் வனத்துறையினர் கைது செய்ததோடு அவர்களிடமிருந்து 3 மோட்டார்சைக்கிளையும் பறிமுதல் செய்தனர். இந்நிலையில் தப்பியோடிய 2 பேரை வனத்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.