தமிழகத்தில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் ரேஷன் கடைகள் மூலமாக குடும்ப அட்டைதாரர்களுக்கு மலிவான விலையில் உணவு பொருட்கள் வழங்கப்படுகிறது. இதையடுத்து ஸ்மார்ட் கார்டு வந்த பின் குடும்ப தலைவர் அல்லது உறுப்பினர்கள் நேரில் வந்து தங்களது கைரேகையை பதிவு செய்து பொருள்களை வாங்கும் பயோமெட்ரிக் முறை அமல்படுத்தப்பட்டது. இந்த பயோமெட்ரிக் முறையானது கைரேகை பதிவு செய்வதில் சிக்கல் ஏற்பட்டு வருகிறது. அதாவது வயது மூத்தோர் பொருட்கள் வாங்க ரேஷன் கடைகளுக்கு வரும்போது அவர்களின் கைரேகைகளானது சரியாக பதிவது இல்லை.
இதனால் அவர்கள் ரேஷன் பொருள்களை வாங்க முடியாமல் சிரமத்திற்கு ஆளாகின்றனர். இதன் காரணமாக கைரேகை பதிவினை புதுப்பித்து வரவேண்டும் என்று ரேஷன் கடை ஊழியர்கள் அலைக்கழிக்கும் சம்பவங்கள் நடைபெற்று வருவதால், இது தொடர்பாக குற்றசாட்டுகள் எழுந்துள்ளது. ஆகவே விரல் ரேகை சரிபார்க்கும் நடைமுறையில் பிப்ரவரி 22 முதல் இடையூறுகள் ஏற்படுகிறது. இது நம்முடைய மாநிலத்தில் மட்டுமன்றி இதர மாநிலங்களிலும் நிகழ்ந்துள்ளன. இது சம்மந்தமாக நிறுவனங்களின் உயர் அலுவலர்களின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுச் சரி செய்யப் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
ஆகவே தொழில்நுட்பத் தடைகளால் கைரேகை சரிபார்ப்பு முறை செயல்படுத்தப்பட முடியாத நேரங்களில் உடனே கைரேகை சரிபார்ப்பின்றி இதர வழிமுறைகளில் உரிய பதிவுகளை மேற்கொண்டு உரிய கண்காணிப்புடன் தவறாது உணவு பொருட்களை விநியோகம் செய்யப்பட வேண்டும். அதனை தொடர்ந்து அனைத்துக் ரேஷன் அட்டைதாரர்களுக்கும் வழங்க வேண்டிய அத்தியாவசிய உணவு பொருட்கள் தரமாக விநியோகம் செய்யப்பட்டு உணவுப் பாதுகாப்பினை உறுதிப்படுத்திட வேண்டுமெனவும், ரேஷன் கடை பணியாளர்கள் உட்பட அனைத்து அலுவலர்களுக்கும் உரிய அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன எனவும் குறிப்பிடபப்ட்டுள்ளது.