வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மேலப்பாளையம் பகுதியில் காய்கறி வியாபாரியான கிருஷ்ணமூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நாராயணன் என்ற மகன் இருந்துள்ளார். இவர் பதினொன்றாம் வகுப்பு வரை படித்து முடித்துவிட்டு வேலைக்கு செல்லாமல் ஊர் சுற்றி வந்துள்ளார். இதனால் நாராயணனை அவரது பெற்றோர் கண்டித்துள்ளனர். இந்நிலையில் மன உளைச்சலில் இருந்த நாராயணன் தனது வீட்டில் விஷம் குடித்து மயங்கி கிடந்துள்ளார்.
இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர்கள் உடனடியாக நாராயணனை அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக நாராயணன் இறந்துவிட்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.