ரிஷபம் ராசி அன்பர்களே.!! இன்று பிள்ளைகளின் பொறுப்புணர்வு அதிகமாகும். தாய்வழியில் ஒத்துழைப்பு அதிகரிக்கும். புதியவர்கள் அறிமுகமாவார்கள். வீட்டை விரிவுபடுத்திக் கட்ட திட்டமிடுவீர்கள். வாகனத்தை சரிசெய்வீர்கள். வியாபாரத்தில் சில சூட்சுமங்களைப் புரிந்துக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் புதிய வாய்ப்புகள் தேடிவரும். இன்று மனம் மகிழும் சம்பவங்களும் நடக்கும். நண்பர்கள் உறுதுணையாக இருப்பார்கள்.
மனநிம்மதியும் மனத்திடமும் இருக்கும். தெளிவான சிந்தனையுடன் எதிலும் ஈடுபடுவீர்கள். முயற்சிகளில் சாதகமான பலன்கள் கிடைக்கும். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். உற்சாகமாக காணப்படுவீர்கள். திடீர் செலவு மட்டும் கொஞ்சம் இருக்கும் பார்த்துக்கொள்ளுங்கள். மாணவ கண்மணிகளுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது வெளிர் பச்சை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். வெளிர் பச்சை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்ககூடியதாக இருக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள். அனைத்துக் காரியமும் ரொம்ப நல்ல படியாக நடக்கும்.
இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : வடக்கு
அதிஷ்ட எண் : 3 மற்றும் 6
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் பச்சை மற்றும் ஆரஞ்சு நிறம்