மிதுனராசி அன்பர்களே..!! இன்று குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். தோல்வி மனப்பான்மையிலிருந்து விடுபடுவீர்கள். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை திருப்பித் தருவீர்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். உத்தியோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். இன்று தொழில் வியாபாரத்தில் இருந்த தடைகள் நீங்கும். போட்டிகள் குறையும். பழைய பாக்கிகளை வசூல் செய்வதில் வேகமும் இருக்கும்.
உத்தியோகத்தில் இருப்பவர்கள் தெளிவாக சிந்தித்து எதையும் வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். புதிய பதவிகள் இல்லம் தேடி வரகூடும். நீங்கள் சொன்ன சொல்லை இன்று காப்பாற்றி விடுவீர்கள் இன்று மாணவ கண்மணிகளுக்கு எந்த பிரச்சினையும் இல்லை. கல்வியில் நல்ல முன்னேற்றம் இருக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று மிதுனம் ராசி நேயர்களுக்கு உடலில் வசீகரத் தன்மை கூடும். திருமண முயற்சி ரொம்ப சிறப்பாகவே நடக்கும்.
இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கக்கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள். அனைத்துக் காரியமும் சிறப்பாக நடக்கும்.
இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 2 மற்றும் 7
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை மற்றும் நீல நிறம்