மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் சக்கரத்தில் சிக்கி 4 வயது சிறுமி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள அம்பை ரகுமான் காலனியில் கட்டிட தொழிலாளியான ராஜா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நான்கு வயதுடைய அபர்ணா என்ற மகள் இருந்துள்ளார். இந்நிலையில் இரவு நேரத்தில் ராஜா தனது மகளுடன் மோட்டார் சைக்கிளில் வெளியே சென்றுள்ளார். இதனையடுத்து அம்பை-தென்காசி மெயின் ரோட்டில் இருக்கும் ஒரு பெட்ரோல் பங்கில் பெட்ரோல் போட்டுவிட்டு ராஜா ஒரு திருப்பத்தில் நின்றுள்ளார்.
அப்போது அவ்வழியாக அந்த ஒருவர் காரை பின்னோக்கி இயக்கிய போது எதிர்பாராதவிதமாக ராஜாவின் மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இதனால் நிலை தடுமாறி கீழே விழுந்த சிறுமியின் மீது கார் சக்கரம் ஏறி இறங்கியதால் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் காரை ஓட்டி வந்தவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.