ரஷ்ய படையெடுப்பு காரணமாக உக்ரேனை விட்டு பிப்ரவரி 26ஆம் தேதியன்று மட்டும் சுமார் ஒரு லட்சத்து 20 ஆயிரம் மக்கள் அண்டை நாடுகளுக்கு அகதிகளாக சென்றுள்ளார்கள்.
ரஷ்யா உக்ரேன் மீது தொடர்ந்து 4 ஆவது நாளாக போரைத் தொடுத்து வருகிறது. இதனால் சுமார் ஒரு லட்சத்துக்கும் அதிகமான உக்ரேனியர்கள் தங்கள் நாட்டைவிட்டு அண்டை நாடுகளுக்கு வெளியேறியுள்ளதாக ஐ.நா சபையின் அகதிகளுக்கான கமிஷனர் சபியா தெரிவித்துள்ளார்.
மேலும் இதுகுறித்து அவர் கூறியதாவது, சுமார் 1,60,000 மக்கள் சர்வதேச எல்லையை கடந்து உள்ளதாகவும், இந்த எண்ணிக்கை ஒவ்வொரு மணி நேரத்திற்கும் மாறுபடுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அதுமட்டுமின்றி பிப்ரவரி 26-ஆம் தேதி அன்று மட்டுமே சுமார் 1,20,000 மக்கள் உக்ரேனை விட்டு அகதிகளாக பக்கத்து நாடுகளுக்கு சென்றுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.