Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

அட்டகாசம் செய்த ஒற்றை யானை…. பெரும் நஷ்டத்தில் விவசாயிகள்…. வனத்துறையினருக்கு விடுத்த கோரிக்கை…!!

ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்யும் காட்டு யானையை வனப்பகுதிக்குள் விரட்டியடிக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தென்காசி மாவட்டத்திலுள்ள சில்லரைபுரவு பஞ்சாயத்திற்கு உட்பட்ட மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் 800 ஏக்கருக்கு மேற்பட்ட பரப்பளவில் விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. இங்கு தென்னை, வாழை, மா, நெல் உள்ளிட்ட விவசாயம் அதிக அளவில் நடைபெறுகிறது. இந்நிலையில் ஒற்றை தந்தத்துடன் காட்டு யானை ஒன்று திரவியம்நகர் பகுதியில் சுற்றி திரிகிறது.

இந்த காட்டு யானை விவசாய நிலங்களுக்குள் புகுந்து தென்னை, வாழை, போன்றவற்றை நாசம் செய்கிறது. இதனால் விவசாயிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. எனவே ஊருக்குள் நுழையும் காட்டு யானைகளை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Categories

Tech |