Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

கன்னி இராசிக்கு… “சிலர் வீண் பழி சுமத்த முயற்சிப்பார்கள்”… நிம்மதி கொஞ்சம் குறையலாம்.!!

கன்னிராசி அன்பர்களே..!! இன்று வேலைச்சுமை இருந்துக் கொண்டேயிருப்பதாக ஆதங்கப்படுவீர்கள். உங்கள் மீது சிலர் வீண் பழி சுமத்த முயற்சிப்பார்கள். சிறுசிறு அவமானம் ஏற்படக்கூடும். வியாபாரத்தில் இழப்புகள் கொஞ்சம் ஏற்படும். உத்தியோகத்தில் அவசர முடிவுகள் எடுக்க வேண்டாம். சகிப்புத் தன்மை தேவைப்படும் நாள் ஆக இருக்கும். இன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் கவனமாக பணிகளை கவனிப்பது நல்லது. வீண் அலைச்சலும் கூடுதல் உழைப்பும் இன்று இருக்கும். குடும்பத்தில் வீண் குழப்பம் ஏற்பட்டு பின்னர் சரியாகும்.

அதனால் உங்களுடைய நிம்மதி கொஞ்சம் குறையலாம். வாழ்க்கை துணையின் பேச்சைக் கேட்டு நடக்க வேண்டியிருக்கும். கௌரவமும் அந்தஸ்தும் உங்களுக்கு உயரும். வெளி நபருக்கு நீங்கள் உதவி செய்யும் பொழுது ரொம்ப கவனமாக செயல்பட வேண்டும். தயவு செய்து உதவிகள் செய்வதாக இருந்தால் இன்று வேண்டாம். தள்ளிப் போடுவது ரொம்ப நல்லது.. முடிந்தால் இன்று ஆலயம் சென்று வாருங்கள் ரொம்ப சிறப்பாகவே இருக்கும்.

இன்று மாணவ செல்வங்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை. சிறப்பான முன்னேற்றத்தை அவர்கள் பெறுவார்கள். கல்வியில் ஆர்வமாக இருப்பார்கள். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். பச்சை நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தைக் கொடுக்கக்கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள். அனைத்துக் காரியமும் ரொம்ப சிறப்பாக நடக்கும்.

இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : வடக்கு

அதிஷ்ட எண் : 1 மற்றும் 2

அதிர்ஷ்ட நிறம் : நீலம் மற்றும் பச்சை நிறம்

Categories

Tech |