Categories
மாநில செய்திகள்

டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2A தேர்வர்களுக்கான தேர்வு முறை…. இதோ முழு விபரம்…..!!!!!

டிஎன்பிஎஸ்சி வாயிலாக நடத்தப்படும் குரூப்-2, 2A தேர்வு அறிவிப்பு கடந்த 18ஆம் தேதி வெளியாகியது. இந்த தேர்வு மூலம் 5,831 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட இருக்கின்றன. இத்தேர்வுக்கான புதிய பாடத்திட்டம் மற்றும் மாதிரி வினாத்தாள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பின்படி தேர்வர்கள் முன்கூட்டியே தயாராகி வருகின்றனர். இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் மார்ச்-23 ஆம் தேதி ஆகும். இதில் குரூப்-2 தேர்வுகளுக்கு விண்ணப்பிப்பதற்கு விண்ணப்பதார்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகத்தில் பட்டப்படிப்பு முடித்து இருக்க வேண்டும். எனினும் கூட்டுறவுத்துறை சார்ந்த சில பதவிகளுக்கு டிப்ளமோ படித்திருந்தால் விண்ணப்பிக்கலாம்.

அதுமட்டுமல்லாமல் குரூப்-2 பதவிகளுக்கு வயது தகுதி, பொது பிரிவினருக்கு 18-32 வரை ஆகும். பிற வகுப்பினர்களுக்கு வயது வரம்பு இல்லை. இந்த அடிப்படையில் நேர்முகத் தேர்வு பதவியிடங்களுக்கு 116 இடங்களுக்கும், நேர்முக தேர்வு அல்லாத பதவிகளுக்கு 5413 இடங்களுக்கு தேர்வு நடைபெறும். அத்துடன் குரூப்-2 பதவியிடங்களுக்கான தேர்வு முறை முதல்நிலை தேர்வு, முதன்மைத்தேர்வு, நேர்முகத் தேர்வு ஆகிய 3 நிலைகளில் நடைபெறும். இதையடுத்து குரூப் 2ஏ பதவியிடங்களுக்கு முதல்நிலைத் தேர்வு மற்றும் முதன்மைத் தேர்வு மட்டும் நடைபெறும். இந்த பதவிகளுக்கு நேர்முகத் தேர்வு கிடையாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் முதல்நிலைத் தேர்வு 2 பிரிவுகளாக நடைபெறும்.

இதில் முதல் பிரிவில் தமிழ் அல்லது ஆங்கிலம் மொழிப்பாடத்தில் இருந்து 100 வினாக்களும், 2-ம் பிரிவில் பொது அறிவு பகுதியில் 75 வினாக்களும், கணிதப் பகுதியில் 25 வினாக்களும் என்று மொத்தம் 200 வினாக்கள் கேட்கப்படும். அதன்பின் முதல் நிலைத் தேர்வில் தேர்ச்சி பெறுவோர் முதன்மை தேர்வுக்கு அனுமதிக்கப்படுவர். இதற்கிடையில் முதன்மைத் தேர்வானது 2 தாள்களாக நடைபெறும். அந்த அடிப்படையில் தமிழ் மொழித் தகுதித் தேர்வு, 2-ம் தாள் பொது அறிவு பகுதியில் இருந்து விரிவான விடையளித்தல் தேர்வாக அமையும் என்பது குறிப்பிடத்தக்கது. முதன்மைத் தேர்வில் தகுதி பெறுவோர் நேர்முகத் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பிற்கு அழைக்கப்படுவர். பின் அதிலும் தகுதி பெறுபவர்களுக்கு கலந்தாய்வு மூலமாக பணியிடங்கள் வழங்கப்படும்..

Categories

Tech |