Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

கொலை முயற்சி வழக்கு…. வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது…. ஆட்சியரின் அதிரடி உத்தரவு…!!

வாலிபரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய ஆட்சியர் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள சந்தைப்பேட்டை பகுதியில் விஜய் என்பவர் வசித்து வருகிறார். இவர் கதிர்வேல் என்பவரை இரும்பு கம்பியால் தாக்கி கொலை செய்ய முயன்றுள்ளார். இந்த வழக்கில் டவுன் காவல் துறையினர் விஜய்யை கைது செய்து சிறையில் அடைத்துவிட்டனர்.

இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு விஜயை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். இதனை அடுத்து சிறையில் இருக்கும் விஜய்க்கு குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டதற்கான நகலை சிறை அலுவலர்கள் கொடுத்துள்ளனர்.

Categories

Tech |