தனுசு ராசி அன்பர்களே..!! சில விஷயங்களுக்கு அனுபவ அறிவை பயன்படுத்துவது நல்லது. வியாபாரத்தில் வேலையாட்களால் டென்ஷன் அதிகரிக்கும். உத்யோகத்தில் அதிகாரிகளால் அலைகழிக்கப்படுவீர்கள். இடம் பொருள் ஏவல் அறிந்து செயல்பட வேண்டிய நாள் ஆக இருக்கும். இன்று தொழில் வியாபாரத்தில் வீண் அலைச்சலும் பண விரயமும் இருக்கும். புதிய ஆர்டர்கள் கிடைப்பது தாமதமாகத்தான் இருக்கும். மனதில் வியாபாரம் பற்றிய கவலை ஏற்படும்.
உத்தியோகத்தில் இருப்பவர்கள் அலுவலகப் பணிகளில் கூடுதல் கவனமுடன் செய்வது நல்லதாக இருக்கும். குடும்பத்தில் நிம்மதி குறையும். படியான சூழ்நிலை உருவாகும். இன்று கணவன் மனைவிக்கிடையே வீண் வாக்குவாதங்கள் ஏற்படலாம் பார்த்துக்கொள்ளுங்கள். நிதானமாக செயல்படுங்கள். மாணவர்களுக்கு இன்று எந்த பிரச்சினையும் இல்லை.
நல்ல முன்னேற்றம் இருக்கும். கல்வியில் ஆர்வம் மிகுந்து காணப்படும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது வெளிர் பச்சை நிறத்தில் ஆடை அணிந்து செல்லுங்கள். வெளிர் பச்சை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்க கூடிய அளவில் இருக்கும். இன்று சிவபெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள். அனைத்து காரியமுமே ரொம்ப நல்லபடியாக நடக்கும்.
இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : மேற்கு
அதிஷ்ட எண் : 5 மற்றும் 6
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் பச்சை மற்றும் வெள்ளை நிறம்