ஐஸ்வர்யாவின் செயலால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்ததோடு கவலையும் அடைந்துள்ளனர்.
இயக்குனர் ஐஸ்வர்யா மற்றும் தனுஷ் அண்மையில் பிரிந்தது நாம் அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் ஐஸ்வர்யா ஷூட்டிங்கில் பிஸியாகிவிட்டார். தற்போது இவர் முசாபீர் என்ற பாடலை இயக்கி வருகின்றார். மேலும் இப்பாடலை இவரே தயாரிக்கின்றார். இவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இப்பாடல் குறித்து இரண்டு வீடியோக்களை பதிவிட்டுள்ளார். இதைப்பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அது என்னவென்றால் இந்த இரண்டு வீடியோக்களும் ஐஸ்வர்யா தனது பெயருக்குப் பின்னால் தனுஷ் பெயரைப் போடாமல் அப்பாவான ரஜினிகாந்தின் பெயரை போட்டுள்ளார்.
தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இணைய உள்ளதாக தகவல் வெளியாகிருந்த நிலையில் இந்நிகழ்வு ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது. ரசிகர்கள் இருவரும் சீக்கிரம் சேர்ந்து விடுங்கள். உங்களின் பெயரின் பின்னால் தனுஷ் அண்ணாவின் பெயரையே எதிர்பார்க்கிறோம் என்று கூறி வருகின்றனர். மேலும் மகன்களுக்காக இருவரும் தங்களது முடிவை மாற்றிக் கொள்ளுமாறு ரஜினி கூறி வந்ததை அடுத்து இவர்கள் மனம் மாறியுள்ளதாக கூறப்படுகின்றது. இந்நிலையில் ரசிகர்கள் இவர்கள் இருவரும் இணையும் செய்திக்காக காத்திருக்கின்றோம் என கூறிவருகின்றனர்.