Categories
தேசிய செய்திகள்

எல்லாம் போச்சே…! மண்டையில ஒண்ணும் இல்லயே…. அதிர்ச்சியில் மயங்கிய மணப்பெண்…!!!!

திருமண நிகழ்வு ஒன்றில் மணமகனின் அந்த கோலத்தை பார்த்து மணமகள் மயங்கி விழுந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் எட்டவா பகுதியில் உள்ள பார்த்தனா என்ற ஒரு இடத்தில் திருமண நிகழ்வானது பாதியில் நின்று உள்ளது. ஏனெனில் மணமகன் அஜய்குமார் விக் அணிந்திருப்பது, திருமணத்தில் மாலை மாற்றும் சடங்கு நடந்தபோது மமணமகளுக்கு தெரிய வந்துள்ளது. இந்த நிலையில் இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த மணமகள் மணமேடையிலேயே மயக்கமடைந்து கீழே விழுந்து உள்ளார்.

இதனையடுத்து அங்கிருந்த உறவினர்கள் அனைவரும் அச்சமுற்று, அவரது முகத்தில் தண்ணீர் தெளித்து அவரை எழுப்பினர். அதன்பின் மணமகள் இந்த திருமணம்  தனக்கு வேண்டாம் என்று கூறி மறுத்துவிட்டார். இதனால் இரு வீட்டாருக்கும் இடையே சண்டை சச்சரவுகள் நிகழ்ந்துள்ளது. இதனைத்தொடர்ந்து தொடர்ந்து ஏற்பட்ட சண்டையால் சமாதானமும் ஏற்படாத நிலையில், மணமகன் கோபத்துடன் மண்டபத்திலிருந்து திருமணம் செய்யாமலேயே வெளியே சென்று விட்டார். தற்போது இந்த செய்தியானது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Categories

Tech |