Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

மேய்ச்சலுக்கு சென்ற ஆடுகள்…. உரிமையாளருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. பொதுமக்கள் கோரிக்கை….!!

தெரு நாய்கள்  கடித்து 4 ஆடுகள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள  கார்ணாம்பூண்டி கிராமத்தில் விவசாயியான பெரியசாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் நேற்று அதே பகுதியில் உள்ள தனது விவசாய நிலத்தில் ஆடுகளை மேய்ச்சலுக்காக கட்டி வைத்துள்ளார். அப்போது திடீரென அங்கு வந்த தெருநாய் கும்பல் ஆடுகளை சரமாரியாக கடித்துள்ளது.

இந்த விபத்தில் படுகாயமடைந்த நான்கு ஆண்டுகள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தவிட்டது. மேலும் இதுபோன்று தெருநாய்கள் அடிக்கடி ஆடு மற்றும் கோழிகளை கொன்று  வருவதாகவும் பொதுமக்கள்  கூறியுள்ளனர். எனவே  தெரு நாய்களை பிடிக்க கிராம நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Categories

Tech |