வலிமை திரைப்படத்தில் நீக்கப்பட்ட காட்சி இணையத்தில் வெளியாகி உள்ளது.
நடிகர் அஜித் குமார் நடிப்பில் பிப்ரவரி 24 இல் வெளியாகிய திரைப்படம் வலிமை. இத்திரைப்படத்தை வினோத்குமார் இயக்கியிருந்தார். போனி கபூர் தயாரித்த இத்திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.அஜித்துக்கு ஜோடியாக ஹீமா குரேஷி நடித்திருந்தார். அஜித்தின் திரைப்படங்கள் இரண்டு வருடங்களாக வெளியாகாத நிலையில் வலிமை திரைப்படத்தின் ரிலீஸை ரசிகர்கள் கோலாகலமாக திருவிழா போல் கொண்டாடினர். இப்படம் வசூலில் பல சாதனைகளை செய்து வருகின்றது.
இத்திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றாலும் சில விமர்சனங்களையும் பெற்றுள்ளது. அது படத்தின் நீளம் அதிகமாக உள்ளது என கூறப்பட்ட நிலையில் படக்குழு படத்தின் 14 நிமிட காட்சியை நீக்கியது. நீக்கப்பட்ட காட்சியின் 3 நிமிட காட்சி தற்போது சமூக வலைத்தளத்தில் வெளியாகி உள்ளது.