வீட்டில் கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.
திருச்சி மாவட்டத்திலுள்ள மணச்சநல்லூர் பகுதியில் வள்ளி என்பவர் வசித்து வருகிறார். இவர் பக்கத்து ஊரில் இருக்கும் தனது மகளை பார்ப்பதற்காக வீட்டை பூட்டி விட்டு சென்றுள்ளார். இந்நிலையில் திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு வள்ளி அதிர்ச்சி அடைந்தார்.
அதன்பின் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 5 ஆயிரம் ரூபாய் பணம், 1 பவுன் தங்க நகையை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றது தெரியவந்துள்ளது. இது குறித்து வள்ளி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.