ஈரான் விமான நிலையத்தில் இருந்து கிளம்பிய விமானம் கீழே விழுந்து நொறுங்கி விபத்துள்ளாகியுள்ளது.
ஈரான் தலைநகர் டெக்ரானில் இருந்து புறப்பட்ட உக்ரைன் நாட்டை சேர்ந்த போயிங் 737 விமானம் விபத்துள்ளாகியுள்ளது. 180 பேருடன் டெக்ரான் விமானநிலையத்தில் இருந்து புறப்பட்ட சிறிது நேரத்தில் கீழே விழுந்து நொறுங்கியது. போயிங் 737 ரக இந்த விமானத்தில் அடிக்கடி தொழில்நுட்ப கோளாறு ஏற்படுவது வழக்கம் என்பதால் இது தொழில்நுட்ப கோளாறா ? அல்லது போர் சூழல் காரணமாக விமானம் தவறுதலாக தாக்கப்பட்டுள்ளதா ? என்று விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. ஆனால் இது தொழில்நுட்பக்கோளாறு கோளாறு காரணமாக இந்த விபத்து நடந்துள்ளதக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.ஈராக் – அமெரிக்கா போர் பதற்றம் நிலவி வரும் நிலையில் விமானம் விபத்துக்குள்ளாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.